Skip to main content

அண்ணாமலைப்பல்கலை கழக ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்குக CPIM வலியுறுத்தல்

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
அண்ணாமலைப்பல்கலை கழக ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு
உடனடியாக சம்பளம் வழங்குக CPIM வலியுறுத்தல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்  ஊழியர்கள்  தங்களின் மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி நேற்று முதல் (5.10.2017) பல்கலைக்கழக வளாகத்திற்குள் உண்ணாநிலைப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். 

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் மாத சம்பளம் அந்த மாதத்தின் கடைசி வேலை நாளன்று வழங்குவதில்லை. ஒவ்வொரு மாத சம்பளத்தையும் அடுத்த மாத இறுதியிலோ அல்லது அதற்குப் பிறகோ வழங்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தீபாவளி கொண்டாடக்கூடிய இந்த மாதத்தில் கூட இன்று வரை செப்டம்பர் மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கண்டிக்கிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், கடந்த மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும்;  ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட மாதத்தின் கடைசி நாளன்று சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

மேலும், பல ஆண்டுகளாக பணிபுரியும் தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

- ஜி. ராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்