விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க சென்ற
இரு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி மரணம்
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது-17). அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது நண்பர் சண்முகராஜன்,(வயது-19) இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இருவரும் தங்கள் பகுதியில் வைத்து வழிபட்ட 3 அடி உயரமுள்ள வினாயகர் சிலை கரைக்க இன்று பெற்றோருடன் மேட்டூர் சென்று அணையின் கீழ் உள்ள ஆற்றுப் பகுதியில் விநாயகர் சிலையை கரைத்த போது ஆழம் அதிகமாக இருந்த பகுதிக்கு சென்றதால் இவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இவர்களின் உடலை மீட்ட மேட்டூர் போலீசார் கைப்பற்றி உடற்க்கூறு ஆய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சிவா