தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வர இருக்கிறது. இதற்கான பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நேற்றும், இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் நேற்றும், இன்றும் இரவு 9 மணி வரை அத்தியாவசிய பொருட்களளுக்கான கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதால் இன்று காலை முதல் பொருட்களை வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் தற்போது இரவு 9 மணியை எட்டியதால் அறிவிக்கப்பட்டபடி கடைகள் மூடப்பட்டு வருகின்றன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தாலும் வெளியூர் செல்வர்களின் வசதிக்காக இரவு 11.45 மணிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.