காதல் தோல்வியில் விரக்தி;
நீச்சல் உதவியாளர் தற்கொலை !
திருச்சி ஜாமல் முகமது கல்லூரி அருகே உள்ள அண்ணாவிளையாட்டு அரங்கில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை நீச்சல் பயிற்சிக்கு வருவது வழக்கம். அவா்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனடியாக அவா்களை காப்பாற்றும் பாதுகாவலா்கள் மற்றும் பராமரிப்பாளா்கள் 4 பேர் உள்ளனா். அவர்களுக்கு உதவியாளர்களும் இருக்கிறார்கள்.
அதில் திருவாரூா் மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் (24). வழக்கம் போல் சிறுவா் சிறுமியா்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவா்களுக்கு பாதுகாப்பு பணியிலும் உதவி செய்கிற பணியை செய்த வினோத்குமாரை அவருடன் பணியாற்றுபவா்கள் மதிய உணவிற்காக சென்றபோது இவரையும் அழைத்துள்ளனா்.
ஆனால் அவா் வராததால் மற்றவா்கள் சென்று உணவருந்திவிட்டு 4 மணிக்கு மேல் வந்து அவா்கள் தங்கும் அறையில் வந்து பார்த்தபோது வினோத்குமார் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனா்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து பயிற்சியாளா்கள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு தகவல் கொடுத்தனா். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலா் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த கே.கே.நகா் காவல்துறையினா் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினா், தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விசாரணையில் இவர் ஒரு பெண்ணை காதலித்தார் என்றும், சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர் மிகவும் சோகமாக இருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா என்கிற ரீதியில் விசாணை நடத்தி வருகிறார்கள்.
- ஜெ.டி.ஆர்.