Skip to main content

நண்பரின் மனைவியை கடத்திய வாலிபர்... குழந்தைகள் அழுவதை பார்த்து...

Published on 11/10/2019 | Edited on 11/10/2019


 

நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டிட பணிகளுக்கு செல்லும்போது அந்த தொழிலாளிக்கு ஒரு வாலிபருடன் நட்பு கிடைத்தது. தனக்கு வேலை இல்லாதபோது, எங்காவது வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று அந்த வாலிபரிடம் சொல்லி வைத்து அங்கு வேலைக்கு சென்று வருவார். இந்த அளவுக்கு பழக்கம் ஏற்பட்டததால், அந்த வாலிபர் வீட்டுக்கு வந்து செல்ல தொடங்கினார்.


 

mind changed


 

வீட்டுக்கு வரும் வாலிபர் தொழிலாளியின் குழந்தைகள் மற்றும் மனைவியிம் அன்பாக பேசி வந்தார். நாளடைவில் தொழிலாளி வீட்டில் இல்லாத நேரத்திலும் அந்த வாலிபர் வரத்தொடங்கினார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அந்த தொழிலாளியிடம் தெரிவித்தனர். அவர் மனைவியின் மாற்றத்தை கண்டு அதிர்ச்சியானதுடன், கண்டிக்கவும் செய்தார். 


 

அந்த வாலிபரை சந்திக்காமல் இருந்த தொழிலாளியின் மனைவி திடீரென மாயமானார். மாயமான மனைவியை பல இடங்களில் தேடி பார்த்த அந்த தொழிலாளியிடம், அக்கம் பக்கத்தினர் உங்களுடன் பழகிய அந்த வாலிபர் எங்கே, அவரது செல்போனை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அநத் வாலிபரை பற்றி விசாரிக்கும்போது அந்த வாலிபரும் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தொழிலாளி நடந்த விவகாரங்களை மார்த்தாண்டம் போலீசில் சொல்லி புகார் செய்தார். புகாரில் வீட்டுக்கு வந்து சென்ற நண்பர், தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து மனைவியை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
 

மார்த்தாண்டம் போலீசார் இது பற்றி விசாரணை நடத்தினர். மாயமான இருவரையும் ராஜாக்கமங்கலம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்ததும் அவர்களை அழைத்து வந்தனர். அந்த தொழிலாளிக்கும் தகவல் சொல்லி அனுப்பினர். 


 

அந்த பெண்ணின் கணவர் தன்னுடன் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். காவல்நிலையத்தில் அந்த பெண்ணிடமும் வாலிபரிடமும் போலீசார் அறிவுரை கூறினர். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த பெண்ணிடம், குழந்தைகளை அழைத்து வந்து காண்பித்தார். அப்போது அந்த பெண்ணின் குழந்தைகள் அழுதுகொண்டே தங்களுடன் வருமாறு அழைத்தனர். குழந்தைகளின் அழுகையை கண்டு மனம் மாறிய பெண், கணவருடன் செல்ல தயாரானார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இனியாவது குடும்பத்துடன் இணைந்து வாழுமாறு போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர். அந்த வாலிபருக்கும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்