Skip to main content

கோடிக்கணக்கில் மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் குவியும் புகார்கள்!!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

Fraud in the millions; Complaints piled up in the commissioner's office

 

மதுரை காளவாசலை தலைமையிடமாக செயல்பட்டுவருகிறது வேர்ல்ட் சேர்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிடெட். இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனை நம்பி தமிழ்நாடு முழுவதும் பலர் முதலீடு செய்துள்ளனர். இதில் குறிப்பிட்ட நாட்களில் இரட்டிப்பாக பணத்தை திருப்பித் தந்த நிறுவன உரிமையாளர்கள், மேலும் தங்களுக்கு கீழ் உறுப்பினர்களைச் சேர்த்து முதலீடு செய்தால் கூடுதல் தொகை தருவதாக ஆசை வார்த்தை தெரிவித்தனர். 

 

இதனை நம்பிய முதலீட்டாளர்கள் பலர் தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் பணம் பெற்று முதலீடு செய்தனர். பிப்ரவரி மாதம்வரை முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தந்த உரிமையாளர்கள், அதன்பிறகு பணம் தரவில்லை. அவர்களைத் தொடர்புகொண்டபோது  எந்த தகவலும் தெரிவிக்காமல் ஃபோனைத் துண்டித்துவிட்டனர். தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த முதலீட்டாளர்கள் மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் புகார் தெரிவித்தனர். இதில் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ. 55 கோடிவரை  முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

புகார் தெரிவித்த பவித்ரா கூறியதாவது, “மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர்கள் ஆனந்தி, செய்யது பாரூக், மனோஜ் ஆகியோர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தை நடத்திவருகின்றனர். நிறுவனத்தில் எங்களைப்போல் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர். ரூ. 2,500 முதல் 10 லட்சம்வரை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் முதலீட்டிற்கு ஏற்ப பணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் இரட்டிப்பு செய்து தருவதாக உறுதி கூறியதை நம்பி நாங்கள் உறவினர்கள் நண்பர்களிடம் என பலரிடம் பணம் பெற்று அவர்களிடம் அளித்துள்ளோம். பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டால் எங்கள் குடும்பத்தினர்மீது கொலை மிரட்டல் விடுக்கின்றனர். போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும்” என தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்