Published on 21/09/2022 | Edited on 21/09/2022

தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று மதங்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காததால் இன்று மருத்துவமனையிலேயே காலமானார். அவருக்கு வயது 77.
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அப்போது சபாநாயகராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் அப்போது தரைவழி போக்குவரத்து துறை மத்திய அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது