Skip to main content

மகன் பெயரில் போர்டு மாட்டிக்கொண்டு, சிகிச்சை அளித்துவந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கைது!

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
மகன் பெயரில் போர்டு மாட்டிக்கொண்டு, சிகிச்சை அளித்துவந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கைது!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், வீரகனூரிலுள்ள கொல்லர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ்(வயது-70). ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளரான இவரது மகன் தினேஷ்(வயது-32), என்பவர் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.

எனவே, தினேஷ் எம்.பி.பி.எஸ், எம்.டி பெயரில் தன்னுடைய வீட்டில் போர்டு மாட்டியுள்ள தேவராஜ், இந்த போர்டை பார்த்துவிட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இவரே ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சையளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மற்றும் கெங்கவல்லி வட்டார இந்திய மருத்துவ சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் சம்பத்திடம் புகார் மனு கொடுத்தனர். அவரது உத்தரவுப்படி, கெங்கவல்லி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தங்கத்தாய், நேற்று வீரகனூர் பகுதிக்கு சென்று தினேஷ் எம்.பி.பி.எஸ், எம்.டி வீட்டில் ஆய்வு செய்தார்.

அப்போது, தேவராஜ் வீட்டினுள் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததற்கான மருந்து, மாத்திரைகள் இருந்தனர். இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், வட்டார தலைமை மருத்துவ அலுவலர் அளித்த புகார்படி, வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி மருத்துவர் தேவராஜை கைது செய்துள்ளனர்.

- பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்