Skip to main content

கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்: பொதுமக்கள் அவதி!

Published on 18/09/2017 | Edited on 18/09/2017
கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்: பொதுமக்கள் அவதி!

தென் மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவிலான மழை பொழிவு காணப்படுகிறது. மேலும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகளிலும் அதிக மழை பெய்வதால் கோவையை சுற்றியுள்ள பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில இருதினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் வழித்தடங்களில் நீர்வரத்து ஆலந்துறை, சித்திரைசாவடி அணைக்கட்டு, பேரூர் படித்துறை, தேவிசிறை அணைக்கட்டு போன்ற பகுதிகளில் அதிகரித்து காணப்படுகிறது. நொய்யல் ராஜ வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோவை செல்வபுரத்தில் 26வது வார்டு பகுதியில் உள்ள எஸ்ஜெ கார்டன், ராஜ் நகர், சரஸ்வதி நகர் போன்ற குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விட்டதாகவும் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதாலும் கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்களும் இல்லை.

இதனால் யாரிடமும் இது தொடர்பாக முறையிட முடியாத நிலை உள்ளதாகவும் இது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி தொகுதி ஆனால் அவரும் கண்டுகொள்ளவில்லை மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை எனவும் மழை காலத்திற்கு முன்னதாக வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தால் தான் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- அருள்குமார்

சார்ந்த செய்திகள்