Published on 24/07/2021 | Edited on 24/07/2021

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான உடல்தகுதித் தேர்வு நாளை (25.07.2021) நடக்கிறது. மொத்தம் உள்ள பத்தாயிரம் பணியிடங்களுக்கு ஏற்கனவே எழுத்துத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில்,. கரோனா ஊரடங்கு மற்றும் தேர்தல் காரணமாக உடல்தகுதி, உடல்திறன் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. இத்தேர்வுகள், நாளை தொடங்குகின்றன.
தமிழ்நாடு முழுவதும் 20 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான உடல்தகுதித் தேர்வு, சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. இதில் 3,913 பேர் கலந்துகொள்கின்றனர். இவர்களில் 864 பேர் பெண்கள். இத்தேர்வுக்கான விரிவான ஏற்பாடுகளை சேலம், நாமக்கல் மாவட்டக் காவல்துறை செய்துள்ளது.