திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு நான்காவது நாளாக 67 மணி நேரத்தை கடந்து முயற்சி எடுத்து வருகிறது.
பாறையின் கடினத்தன்மையை கண்டறிய தீயணைப்பு வீரர் ஒருவர் தற்போது தோண்டப்பட்டுள்ள அந்த 45 அடி குழிக்குள் இறக்கப்பபட்டுள்ளார். ஏணி மூலம் தீயணைப்பு வீரர் ஒருவரை இறக்கி ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பாறையின் தன்மை கடுமையான இருப்பதால் அதிக திறன் கொண்ட ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணியை நிறுத்தியுள்ளது. இதனையடுத்து போர்வெல் இயந்திரம் குழி தோண்டும் பணியில் ஈடுபடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகளை துணை முதல்வர் ஓபிஎஸ் பார்வையிட்டு வருகிறார். அதேபோல் மணப்பாறை சுற்றுவட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1200 குதிரைத்திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 100 அடி வரை குழிதோண்டும் என் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.