ஈரோடு அரசுப் பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்.
ஈரோடு காளை மாடு சிலை அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் சார்பில் தீ விபத்து தற்காப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளியில் தீ விபத்து ஏற்படும் போது தீயணைப்பு கருவிகளை எப்படி பயன்படுத்தி தீயை அணைப்பது, தீ ஏற்படும் போது தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள், செயல்முறைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பள்ளியில் தீ விபத்து நேரத்தில் மயக்கம் ஏற்பட்ட மாணவர்களை மீட்டு உடனடியாக முதலுதவி செய்து மருத்துவச் சிகிச்சைக்கு கொண்டு செல்வது போன்ற செயல்களை மாணவர்களுக்கு தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தது மாணவர்களை வியக்க வைத்தது. மேலும் பேரிடர் நேரத்தில் அரசு பின்பற்ற சொல்லும் வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து துண்டுப் பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.