சேலத்தில் நிதி நிறுவனங்கள், வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை
சேலத்தில் நேற்று முன்தினம் மூலனூர் பகுதியில் உள்ள பல்வேறு நிதிநிறுவனங்களில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பல்வேறு நிதிநிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
இதேபோல் கரூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள நிதிநிறுவனங்களில் நடந்த சோதனையின் போது, சேலம் தீரன் ஆட்டோ பைனான்ஸ், லோட்டஸ் பைனான்ஸ் ஆகிய நிதிநிறுவனங்களின் ஆவணங்களும் சிக்கின. இதனை தொடர்ந்து சேலத்தில் உள்ள லோட்டஸ் பைனான்ஸ், தீரன் ஆட்டோ பைனான்ஸ் ஆகிய நிதிநிறுவனங்களில் 15 பேர் கொண்ட வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டனர்.