Skip to main content

பஸ் கட்டண நிர்ணய உரிமை மாநில அரசிடம் இருந்து பறிக்கப்படும் நிலை வரும்: தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் எச்சரிக்கை

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
Transport-unions


 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ. உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். 

 

Transport-unions


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், 
 

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மறைமுகமாக மத்திய அரசு கையாண்டு, அந்த சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற மேல் அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் போக்குவரத்து கழகங்களே இல்லாமல் போய்விடும். பஸ் கட்டண நிர்ணய உரிமை மாநில அரசிடம் இருந்து பறிக்கப்படும். எனவே இந்த போக்கை கண்டித்தும், இந்த சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
 

Transport-unions



2014-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்துக்கு பதில் சாலை போக்குவரத்து-பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் புதிய சட்டம் உருவாக்க முயற்சி நடந்தது. ஆனால் மோட்டார் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்