
கோவையில் கைத்தறி ஆடைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்து வந்த பேஷன் ஷோ நடைபெற்றது.
கோவையில் மக்கள் சேவை மையத்தின் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன் கைத்தறி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், கைத்தறி தினத்தை கொண்டாடும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கைத்தறி குறித்து மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேஷன் ஷோ நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவிகள் கைத்தறி ஆடைகள் அணிந்து பேஷன் ஷோவில் கலந்து கொள்வர். அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று கைத்தறி ஆடைகளை அணிந்து கல்லூரி மாணவர்கள் பேஷன் ஷோவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாற்பது கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அக்சயா மற்றும் நிவேதா ஆகிய இரு மாணவிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
அந்த மாணவிகள் கைத்தறி தினமான வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். கைத்தறி ஆடைகளின் பயன்பாடு குறைந்ததால் அந்த ஆடைகளை நெய்து வரும் கூலி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிப்பதாகவும் எனவே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் கைத்தறி ஆடைகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இதனால் வேலைவாய்ப்பை உருவாக்குவாக்க முடியும் என மாணவிகள் தெரிவித்தனர்.