புரவி புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் அமைத்து தரவேண்டும் என்றும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
கரோனா பொது முடக்கத்தால் முற்றிலுமாக வேலை வாய்ப்பை இழந்து, வருமானமின்றி, வாழ் நாட்களை நகர்த்தவே படாதபாடு பட்டுக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு, நிவர் மற்றும் புரவி புயலால் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக முடங்கினர்.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து விவசாய, மற்றும் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், வீடு இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புது வீடு கட்டித் தரவேண்டும் என திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.