Skip to main content

போலி மதுபான ஆலை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி மா.செ குண்டர் சட்டத்தில் கைது

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
போலி மதுபான ஆலை: 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மா.செ குண்டர் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சின்னையாசத்திரம் பகுதியில் போலியாக மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபடுவதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் உட்பட 3 பேரை போலிசார் கைது செய்தனர்.
  

சின்னையாசத்திரம் பகுதியில் போலியாக மதுபானம் தயாரிக்க முயன்று வருவதாக, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மதுவிலக்கு போலீசார் விசாரணை செய்தனர். இதில், குவாட்டர் பாட்டில்கள், பாட்டில் மூடிகள், டே-னைட் லேபிள்கள், மிக்சிங் கேன்கள், ரசாயனங்கள், பிரஸ்சிங் மிஷின் ஆகியவைகள் வைத்து போலியாக மது தயாரிக்க ஆயத்தமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.


இந்த போலி மது ஆலையை, புதுக்கோட்டை  தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர்(38), மற்றும் அவரது நண்பர்கள் புதுகை மச்சுவாடியை சேர்ந்த மாரிமுத்து(42), தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40) ஆகியோர் போலியாக மது தயாரிப்பில் ஈடுபட முயன்றதாக தெரியவந்தன. 

இதனையடுத்து, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், ஸ்ரீதர், மாரிமுத்து, பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரிடம் விசாரணை செய்து, மேலும், போலியாக மது தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள், மிஷின் மற்றும் இரண்டு போர்ட் ஐ கான் கார்களை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்து, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் 

இந்த நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மா.செ ஸ்ரீதரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
 

-     இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்