தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார்
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் சரிபார்ப்புக்காக பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்காததால், அவர்களின் பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை படிப்பிற்கான சேர்க்கை கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. பின்னர் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்றிதல்கள் சரிபார்பிர்காக பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இதுவரை முதலாமாண்டு இளநிலை படிப்பில் சேர்ந்த மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு கலை கல்லூரி நிர்வாகத்தினர் அனுப்பி வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அரசு கலை கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை படிப்பில் படிக்கும் மாணவர்களின் முதல் பருவத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது மற்றும் 3 ஆவது ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் மெத்தப் போக்கினால் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலை ஏற்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்து உள்ளனர். மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
அருள்