பெண்கள் கூட ஆர்வமாக ரஜினி கட்சிக்கு வராங்க !
இது கரூர் ஸ்டைல் !
நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கி தமிழகத்தில் 234 தொகுதியிலும் போட்டியிடுவேன் என அறிவித்ததையடுத்து கரூரில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், கீதம் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் பேரூந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம். கரூர் மாநகரையே அதிர வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து நாம் அவர்களிடம் பேசுகையில், கரூரை பொருத்த வரையில் நாங்கள் கடந்த 35 வருடங்களாக ரஜினி ரசிகர்களாகவே இருக்கிறோம்.
ரஜினி அறிவிப்பு பற்றி சொல்லணும்னா காத்திருந்த எங்களுக்கு பம்பர் பரிசு மாதிரி பெரிய உற்சாகம் எங்கிட்ட பதிவு பண்ண அமைப்பு மட்டும் 100க்கு மேல இருக்கும் 1988க்கு பிறகு பதிவு எண்ணே கிடையாது என்பதால் எதுவும் பதிவு பண்ணவே இல்லை. அதனால் பதிவு எண் இல்லாத சங்கங்கள் எல்லாம் நிறைய இருக்கிறது. இவை எல்லாம் ஒருங்கிணைப்பு வேலைகளை ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோம்.
இப்போது விரைவாக செய்து கொண்டிருக்கிறோம். இன்னைக்குகூட எங்களோட இந்த கொண்டாட்டத்தில் கரூர் கிருஷ்ணராயபுரத்தில் இருந்து வந்த பெண் நான் மகளிர் அணியில் நான் இணைந்து செயல்படுகிறேன் என்று சொல்லி வந்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது, சிறுவர்கள் எல்லாம் ஆர்வமாக எங்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் என்றார்.
கரூர் மாவட்ட அமைப்பாளர் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து ரஜினி ரசிகனாகவே இருக்கிறேன். நான் இங்கே பிஸ்னஸ் செய்து கொண்டு வந்தாலும் எங்களுக்கு தி.மு.க. அ.தி.மு.க. இரண்டு கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களை நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இங்கே உள்ள 8 ஒன்றியத்திலும் எங்கள் மன்றங்கள் இருக்கிறது. அதனால் நாங்கள் நல்ல கட்டமைப்போடு தான் இருக்கிறோம். எங்கள் தலைவர் சரியான நேரத்தில் களம் இறங்கியிருக்கிறார்.
எங்கள் தலைவர் பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் என்றார்.
- ஜெ.டி.ஆர்.