விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனைச் சேர்ந்த சரண்ராஜ் (வயது 30) என்பவர் கடந்த 13.09.2020 அன்று சாராயம் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்து விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சரண்ராஜ் சிகிச்சைக்காக 16.06.2020 அன்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரண்ராஜ் அன்று இரவு சுமார் 8 மணியளவில் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடிய நிலையில், போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சரண்ராஜ், ரோசனை அருகிலுள்ள கீழ் கூத்தப்பாக்கம் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், மீண்டும் சரன்ராஜை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் கைதியின் பாதுகாப்புப் பணியில் மெத்தனமாக இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர் கிருஷ்ணதாஸ் ஆகிய இருவரையும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.