தமிழக வனப்பகுதியில் மிகவும் அதிகமாக வாழும் காட்டு விலங்கினம் என்றால் அவை யானைகள்தான். இந்த யானைகள் இரை தேடி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தொடர்ந்து இடம் மாறிச் செல்வது வழக்கம். தனது குட்டிகளுடன் கூட்டத்தோடு யானைகள் ஆங்காங்கே சாலையைக் கடந்து சென்று கொண்டே இருக்கும்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பல நூற்றுக்கணக்கான யானைகள் வசிக்கிறது. அவைகள் உணவு தேடி விவசாயிகளின் தோட்டத்திற்குள் சென்று அங்கு பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தும். இதனால் விவசாயிகள் வனவிலங்குகள் தங்களது தோட்டத்திற்குள் நுழையாமல் இருக்க சிறிய அளவிலான ஷாக்கடிக்க கூடிய மின் வேலிகள் அமைத்துள்ளார்கள்.
அந்த மின் வேலியை விலங்குகள் தொட்டவுடன் படீரென ஷாக்கடிக்கும். இதனால் வனவிலங்குகள் தோட்டத்திற்குள் நுழையாமல் திரும்பி சென்று விடும். அப்படித்தான் தாளவாடி அருகே உள்ள ஜீரகள்ளி வனப்பகுதியில் கரளவாடி என்ற கிராமத்தில் விவசாயி கருப்பசாமியும் மின்வேலி அமைத்திருந்தார். அந்த மின்வேலியில் தான் மிகவும் பரிதாபகரமாக இன்று அதிகாலை இரண்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்துள்ளது.
அதிக பவர் செலுத்தப்பட்ட மின்சாரத்தில் யானைகள் சிக்கியுள்ளது. 6 வயது கொண்ட ஆண் யானையும், ஐந்து வயது கொண்ட பெண் யானையும் அந்த கரும்புத் தோட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் பாய்ச்சப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இறந்துள்ளது இந்த சம்பவம் தாளவாடி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த வனப்பகுதியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பொதுவாக யானைகள் மின் வேலியை தொடும்போது அதிக வோல்டேஜ் இல்லாமல் இருக்கும். ஆனால் இதில் அதிகமான வோல்டேஜ் செலுத்தப்பட்டிருப்பதால் யானைகள் இரண்டும் சம்பவ இடத்திலேயே இருந்துவிட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு யானைகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.