Skip to main content

மருத்துவர்கள் இல்லாததால் பொறியாளர் மரணம்;கீழக்கரை அவலம்

Published on 18/09/2017 | Edited on 18/09/2017

மருத்துவர்கள் இல்லாததால் பொறியாளர் மரணம்;
கீழக்கரை அவலம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா இதம்பாடல் கிராமத்தை சேர்ந்த ஹிதயத்துல்லா மகன் முகம்மது இர்பான் (19) இவர் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.  இவர் நேற்று இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது கட்டுவிரியன் பாம்பு அவரை இரவு 10.40 மணியளவில் கடித்து விட்டது.  

இவரது ஊரான இதம்பாடல் கிராமத்தில் மருத்துவமனையோ,மருத்துவர்களோ கிடையாது.   உடனடியாக இவரது தாய்மாமன் அல்லாபிச்சை இரவு 10.50 மணியளவில் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முதலுதவி செய்ய மருத்துவர் மற்றும் செவிலியர் இல்லாததால் அங்கிருந்து கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   அங்கும் மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் மட்டுமே முதலுதவி செய்தனர். 

 அந்த மாணவனின் நிலை மோசமானது. இதையடுத்து இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கிருந்து மருத்துவர்களின் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. பாம்பு கடித்து 10 நிமிடத்தில் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கும்,15 நிமிடத்தில் தாலுகா அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்ற போதிலும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அந்த குடும்பத்தின் ஒரு பொறியாளர் உருவாகும் கனவு உடைந்துவிட்டது.  இதற்கு காரணம் இராமநாதபுரம் மாவட்ட அரசின் நிர்வாகமே காரணம் என்று இதம்பாடல் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்