Published on 24/10/2023 | Edited on 24/10/2023

ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அன்னனூர் பணிமனையில் இருந்து இன்று காலை மின்சார ரயில் ஆவடிக்கு வந்துகொண்டிருந்த போது, ரயிலில் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை நோக்கி செல்லவேண்டிய இந்த மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் தடம்புரண்டதால், அந்த மார்க்கத்தில் தற்போது ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடனே விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.