தேர்தல் அலுவலர் மாற்றம்: மு.க.ஸ்டாலின், விஷால் வரவேற்பு!
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தேர்தல் அதிகாரியாக பிரவின் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றவேண்டும் என தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு முக்கிய கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. பணப்பட்டுவாடா நடப்பதை வகைசெய்யும் விதமாக தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின், தமிழிசை உள்பட பல தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தேர்தல் அதிகாரியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றக் கோரி மனு அளித்திருந்தோம். அதனை ஏற்று வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. பணபட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகள் இன்னும் விழிப்புடன் செயல்பட்டு, ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனது மனு பரிசீலனையின் போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதை ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதுகிறேன்.
நான் தேர்தலில் நிற்கிறேனோ இல்லையோ, இதன் மூலம் இனியாவது ஆர்.கே.நகரில் நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும் ஆர்.கே.நகர் மக்களும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.