Skip to main content

'போராட்டத்தை தடுக்கும் வகையில் அவசர சட்டம் ' மத்திய அரசை எதிர்க்கும் தொழிற்சங்கத்தினர்..! 

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

EDSO (Essential Defence Services Ordnance)  act employee union's condolence

 

மத்திய அரசு பாதுகாப்பு தொழிற்சாலைகளில் சிலவற்றில் தனியார்மையத்தை கொண்டுவரவுள்ளது. இதனைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக வரும் 26ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 75,000 பாதுகாப்புத்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.  

 

இந்நிலையில், இந்த காலவரையற்ற போராட்டத்தை தடுக்கும் விதமாக கடந்த வாரம் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றி அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஒப்புதலும் வாங்கியுள்ளது. 

 

இதனைக் கண்டித்து இன்று 8ஆம் தேதி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக திருச்சி HEPF தொழிற்சாலையில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், ‘இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக எதேச்சிகார போக்குடன் இயற்றப்பட்ட கருப்பு சட்டமான EDSO (Essential Defence Services Ordnance) பாதுகாப்பு தொழிற்சங்கங்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தடுக்கும் பொருட்டு கடந்த வாரம் இந்த அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு இயற்றி உள்ளது. வருகின்ற 26ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 75,000 பாதுகாப்புத் துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தடுக்கும் பொருட்டு கடந்த வாரம் அவசர சட்டத்தை இயற்றி உள்ளது. 

 

இந்த சட்டமானது இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான கருப்பு சட்டமாக கருதுகிறோம். எமர்ஜென்சி காலத்தில்கூட இது போன்ற கடுமையான சட்டங்கள் இயற்றப்படவில்லை. இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 08-07-2021 கருப்பு தினமாக அறிவித்து போராடி வருகிறோம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் பேசினர்.

 

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி HEPF தொழிற்சாலையில் இன்று காலை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரபாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்றனர். மேலும், இந்த போராட்டத்தில் நான்கு தொழிற்சங்க பொதுச் செயலாளர்கள் மனோகரன், இரணியன், அலெக்சாண்டர் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்