புகழேந்தி மீதான தேசத்துரோக வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய மனு ஒத்திவைப்பு!
கர்நாடக மாநில அதிமுக பொதுச்செயலாளர் புகழேந்தி மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது, துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாகக் கூறி தினகரன், புகழேந்தி உள்ளிட்டோரின் மீது தமிழக அரசு சார்பில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தன் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறும் புகழேந்தி சார்பில் தொடரப்பட்ட மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பான விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளனர்.