ஈரோடு மாவட்டத்தில் பிரதான கால்வாயாக இருப்பது கீழ்பவானி பாசானம். சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இந்த பாசான பரப்பில் உள்ளது. பவானி சாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், கீழ்பவானி வாய்க்காலுக்கு வரும். மஞ்சள், நெல் பிரதான சாகுபடியாக இருந்தது. தற்போது பவானி சாகர் அணையில் தண்ணீர் இல்லை என்பதை கூறி கீழ்பவானி வாய்க்காலில் பாசானத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயிர் செய்ய முடியாமல் வறண்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது 10 நாட்களுக்கு மட்டும் குறைந்த அளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீர் எதற்கும் பயன்படாது என்று கொந்தளித்த விவசாயிகள், வருகிற 13ஆம் தேதி ஈரோடுக்கு அரசு நிகழ்ச்சிக்கு வரும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொட்டி கண்டனத்தை தெரிவிக்க உள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளது.