தலைநகர் சென்னை சுற்றுவட்டார பகுதி கல்லூரி மணவர்களும் சரி, ஐ.டி இளசுகளும் சரி, நடுத்தரவாசிகளும் சரி காதல் ஜோடிகளாக ஜஸ்ட் ரிலாக்ஸ்சா ஒரு லாங் டிரைவ் போலாமா ..? என்று எண்ணும்போது மனதில் உதிப்பது ஈ.சி.ஆர் தான் ..!
காரணம் மல்டிபிக்ஸ் சினிமா தியேட்டர் முதல் காரிலே அமர்ந்துக்கொண்டு சினிமா பார்க்கும் தியேட்டர் முதல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மகிழ வைக்கும் அம்யூஸ்மெண்ட் பார்க்கில் துவங்கி டிரைவின் ஓட்டல், ரெஸ்சார்ட், கார்டன் ரெஸ்சார்ட் ஏன் நம் செல்ல பிராணிகளான நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளுக்கு கூட ரெஸ்டாரண்ட், ஸ்பா (பியூட்டிபார்லர் ) என அனைத்தும் உள்ளதால் அனைத்து தரப்பினராலும் விருப்பபடும் சாலையாக உள்ள ஈ.சி.ஆர் உள்ளது.
ஈ.சி.ஆரில் வார விடுமுறை நாட்களில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயற்றுகிழமை என விடிய விடிய சாதாரணம் வாகனங்கள் முதல் விலை உயர்ந்த பைக், கார் என எல்லாவற்றையும் எளிதாய் பார்க்க முடியும்.
அதிலும் பெரும்பான்மையாக கல்லூரி மற்றும் ஐ.டி நிறுவன இளசுகள் வீக்கென்ட் பார்ட்டி என்ற பெயரில், விடிய விடிய சுற்றுவார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் போதையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்துவது தொடர் கதையாகவே உள்ளது. இதனால் அந்த வார இறுதி நாட்களில் போக்குவரத்து போலீசார் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்று.
சமீபத்தில் விலையுயர்ந்த காரில் அதிவேகமாக வந்தவர்களை ஈ.சி.ஆர் சாலை உத்தண்டி டோல்கேட்டில் மடக்கிபிடித்த நீலாங்கரை போக்குவரத்து ஆய்வாளர் சௌந்தர்ராஜன் மீதே காரை ஏற்றிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. என்ன பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை. அதுவே ஓர் சாமானிய நடுத்தரவாசியாக இருந்தால், கைது செய்து அழைத்து செல்லும்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டிருக்கும் ..!
இந்த அத்து மீறல்கள் ஒருபுறம் இருக்க அதேசாலையில் வரும் காதல் ஜோடிகள், கல்லூரி மாணவர் மாணவிகளை வாகன சோதனை என்ற பெயரில் அபராதம் என்ற பெயரில் போக்குவரத்து காவலர் மெகா வசூலில் ஈடுபடுகிறார் என்ற புகாரும், அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. அபராத தொகையை, பணமாக வசூல் செய்யக்கூடது என்று ஸ்கிரீங் மெஷின் மூலமாக மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்ற சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் கட்டாய உத்தரவிட்டுள்ளார், ஆனாலும் அதை மீறும் போக்குவரத்து போலீசாரின் அட்டூழியம் வழிபறி கொள்ளையர்களையே மிஞ்சும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை வீக்கென்ட் பார்ட்டியை முடித்துக்கொண்டு, ஜூம் கால் டாக்சி அதாவது (கார் மட்டும் வாடகைக்கு தருவார்கள் அதை நாம் ஓட்டிசென்று மீண்டும் நாமே விட வேண்டும் வாடகை சைக்கிள் போன்றது) வாடகை கார் ..!
அந்தகாரில் ஞாயற்றுகிழமை அன்று வாடகைக்கு எடுத்த கல்லூரி மணவர்கள் மூன்று மாணவர்களும், இரண்டு மாணவிகளும் லாங் டிரைவ் சென்று பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் ஈ.சி.ஆர் சாலையில் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள உத்தண்டியில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கம் அருகே யூ டர்ன் செய்தபோது, எதிர்பாராமல் எதிரே வந்த TN-19 2205 என்ற ஆட்டோ மீது மோத, ஆட்டோ கவிழ்ந்து, அதை ஓட்டிவந்த டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு அருகே இருக்கும் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை முடித்து பின், விபத்தால் ஆட்டோவில் ஏற்பட்ட சேதத்தை சீர் செய்து தருவதாக மாணவர்கள் உத்திரவாதம் கொடுத்தனர். அதே வேளையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவலர் மதியழகனும் மற்றும் உடன் வந்த சீருடை அணியாத போலீசார் என்று அறிமுகம் ஆன இருவரும், மாணவர்கள் ஓட்டி வந்த வாடகை காரை பறிமுதல் செய்ததோடு, இந்த நேரத்தில் இரவு முழுவதும் ஆண் பிள்ளைகளுடன் விடிய விடிய எங்கு போய்வந்தீர்கள் என்றும், உங்கள் பெற்றோர் போன் நம்பர் கொடு என்றும், இல்ல கல்லூரி முதல்வர் போன் நம்பரை கொடு என்றும் மாணவிகளை பயங்கரமாக மிரட்ட..!
வீட்டுக்கோ அல்லது கல்லூரி நிர்வாகத்துக்கோ தெரிந்தால் மிக பெரிய பிரச்சனை ஏற்படும் சார்..! தயவு செய்து சொல்ல வேண்டாம் சார் ... எங்க படிப்பு, எதிர்காலமும் வீணாய் போகும் சார்... என்று மாணவர்கள் கெஞ்சியுள்ளனர்.. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்ட போலீசார்
பயந்துபோன மாணவர்களிடம் இருந்த இருபது ஆயிரம் ரூபாயை பிடிங்கியுள்ளனர், மேலும் அத்துடன் விடாமல் மாணவிகளிடம் தோள் மீது கையை வைத்து தடவியபடி பேசிய சீருடை அணியாத போலீஸ் '' நைட் லாம் என்ன பண்ணீங்க..? எங்க தூங்கினீங்கனு ...? மேலும் மதியம் வா... அப்போதான் கார் கிடைக்கும் என இரட்டை அர்த்ததில் பேசியுள்ளார். அந்த போலீஸ்..
நல்ல வேளையாக மாணவர்களுக்கு தெரிந்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.சேகர் என்பவர் அங்கு வர பேசி மாணவர்களை மீட்டுள்ளார். மேலும் அங்கிருந்த போலீசாரிடம் "பாதிக்கப்பட்டவர் புகார் கூட தராமல் எப்படி மாணவர்களை மிரட்டுவீர்கள் என கேட்டுள்ளார். மேலும் விபத்து என்றால் சம்மந்தப்பட்ட மாணவனிடம் லைசன்ஸ் உள்ளதா ..? டி.டி (மது போதையானு )யானு செக் பண்ணுங்க வழக்குப்போடுங்க...? என்று சரமாரி கேள்வி எழுப்ப மாணவர்களை விடுவித்துள்ளனர் அந்த போலீசார்.
பின்னர் தனியாக வந்த மாணவர்கள் தாங்கள் மிரட்டப்பட்டதும், பின்னர் பெற்றோரிடமும் கல்லூரியிலும் நடந்த சம்பவத்தை சொல்லுவோம் என்று மிரட்டி, அபராதம் என்றும் இருபது ஆயிரம் ரூபாயை பிடிங்கி சென்றதையும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவிகளிடம் அத்துமீறிய போலீசாரை பற்றி கூறவே கோபம் அடைந்த பொன்.சேகரன் நமக்கு நடந்த தகவலை கூறினார்.
நடந்த சம்பவத்தை பற்றிகேட்க சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தை தொடர்பு கொண்டோம். சம்பவத்தில் தொடர்புடைய போக்குவரத்து காவலர் மதியழகன் பேசினார். நடந்த சம்பவத்தை பற்றி கேட்டோம், அவரோ "சார் வண்டிய வந்து எடுத்துட்டு போக சொல்லுங்க, விசயத்தை பெருசாக்க வேணாம்'' என சொன்னார். பணம் ஏன் வசூல் செய்தீர்கள், வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை என்று கேட்தற்கு அவரோ பதில் கூறாமல் சைலன்டாக தொடர்பை துண்டித்தார். சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ஷோபனாவை தொடர்பு கொண்டோம் போன் எடுக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை மாநகர கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) அருணை பலமுறை தொடர்பு கொண்டும் செல் போனை எடுக்கவில்லை.
மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய போலீசாரே சீருடை அணிந்து வழிபறி கொள்ளையர் போன்று வசூலிலும், வேட்டையிலும் ஈடுபட்டால் இந்த நாட்டில் யாரை அடையாளம் காண்பது ..?