Skip to main content

ரயில் பயணத்திற்கு  இ-பாஸ் கட்டாயம்-ரயில்வே அறிவுறுத்தல்

Published on 31/05/2020 | Edited on 31/05/2020
E-Pass Mandatory Railway Instructions

 

தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.


கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:02084) செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். இதைப்போல் மயிலாடுதுறை-கோவை ஜன் சதாப்தி சிறப்பு எக்ஸ்பிரஸ் (02083) செவ்வாய்க்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவை-காட்பாடி ‘இன்டர்சிட்டி’ சிறப்பு எக்ஸ்பிரஸ்(02680), காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 11.50 மணிக்கு காட்பாடி சென்றடையும். இதைப்போல் காட்பாடி-கோவை ‘இன்ட்டர்சிட்டி’ சிறப்பு எக்ஸ்பிரஸ்(02679) காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும்.

மதுரை-விழுப்புரம் அதிவேக சிறப்பு ரெயில்(02636) காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இதைப்போல் விழுப்புரம்-மதுரை அதிவேக சிறப்பு ரெயில்(02635) மாலை 4 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 9.20 மணிக்கு மதுரை சென்றடையும்.

திருச்சி-நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரெயில்(02627), காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இதைப்போல் நாகர்கோவில்-திருச்சி அதிவேக சிறப்பு ரெயில்(02628), நாகர்கோவிலில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


இந்நிலையில் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் செல்லும் ரயிலில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என ரயில்வே தெரிவித்துள்ளது. உதாரணமாக காட்பாடியில் இருந்து கோவை ரயிலில் சென்றால் இ-பாஸ்  பெற்றிருக்க வேண்டும். மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ்  தேவை என தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் நோய் தொற்று இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவர். ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்கு பயணிகள் வரவேண்டும். பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் உணவு மற்றும் இதர உணவுப் பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டுவர வேண்டும் எனவும் ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்