








மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பவருடன் நவம்பர் 7-ஆம் தேதி(இன்று) திருமணம் நடைபெற்றது.
திருமண வரவேற்பு நவம்பர் 6-ஆம் தேதி(நேற்று) மாலை நடந்தது. துரை வைகோ - கீதா தம்பதியின் மகள் வானதி ரேணு, வெளிநாட்டில் படித்தவர். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, முன்னாள் முதல்வர் ஒ.பி.எஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இன்று காலை வானதி ரேணுவுக்கும், கோகுல கிருஷ்ணனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.