திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கோடை இளவரசியை ரசித்து விட்டது செல்வது வழக்கம். அதுபோல் கோடையில் நிலவும் குளிர் மற்றும் மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலை பெரும்பாலானோரை ரசிக்க வைக்கிறது. இதனால் கொடைக்கானல் வரும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையும், அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா, ஆந்திரா உட்பட சில வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் மேஜிக் மஷ்ரும் தாவரவியல் பெயர் சைலோசைபி என்றும் இதில் போதை 8 மணி நேரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
]
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம், செட்டியார் பூங்கா, சின்னபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாநிலத்துக்கு போதை காளானை விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. போதைப்பொருளின் பாதிப்புகள் தெரியாமல் இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இந்த போதை பொருட்களினால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதுபோல போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும் போதைப்பொருள் விற்பனையை தற்போது வரை தடுக்க முடியவில்லை எனவே போதை காளான் மற்றும் போதை வஸ்துகளை விற்பனை செய்யோவரை கண்டறியவும் பொது இடங்களில் விற்பனையில் ஈடுபடுவோர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடையில் வாழும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.