Skip to main content

ஆயுதப்படை காவலர் தற்கொலையில் சந்தேகம்! நீதி விசாரணை கோரும் தந்தை!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
poli


ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சென்னை மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் அருள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடிருந்தார். அப்போது அருள் திடீரென தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக் கண்டவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் காவலர் அருணின் தந்தை மலைராஜா கூறுகையில், நேற்று இரவு பணிக்குச் செல்வதற்கு முன் எனது மகன் என்னிடம் போனில் நன்றாகத்தான் பேசினார். தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை. இந்த தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறினார்.

சார்ந்த செய்திகள்

 
News Hub