இரட்டை இலை யாருக்கு? விசாரணை தொடங்கியது
டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது.
டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கி நடக்கிறது. ஏற்கனவே 2 கட்ட விசாரணை முடிந்த நிலையில் தற்போது மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் விசாரணையில் ஆஜராகியுள்ளனர். நவ.10க்குள் சின்னம் யாருக்கு என்பது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 6 பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என டிடிவி தரப்பில் ஏற்கனவே கூறப்பட்ட புகாருக்கு ஈபிஎஸ் தரப்பில் இன்று பதில் கூறப்படுகிறது.
இதனிடையே டிடிவி தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புதிதாக 2 புகார் மனுக்கால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்றும் மோடியால் ஈபிஎஸ் அணிக்கே சின்னம் கிடைக்கும் என கூறிய ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை தேவை என்றும் டிடிவி தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.