நாட்டுக்கு உழைப்பவர்களை கேலி செய்ய வேண்டாம் –டுவிட்டரில் கமல்ஹாசன்
அழுகாமல், ஓடி ஒளியாமல் புரட்சிக்கு தயாராகுமாறு, நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முரசொலி பவள விழாவில் வியாழக்கிழமை மாலை கலந்து கொண்ட பின்னர், டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், விம்மாமல், பம்மாமல் ஆவன செய், புரட்சியின் வித்து தனிச்சிந்தனையே என்று குறிப்பிட்டுள்ளார். ஓடி எனைப் பின் தள்ளாதே என்றும், களைத்து என்னை தாமதிக்காதே என்றும் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
கூடி நடந்தால் வெல்வது நானில்லை, நாம் என்றும் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே என்றும் வலியுறுத்தியுள்ளார். மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் மற்றும் தேசியத்தை பழக வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.