சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றாத
ஊராட்சி அலுவலகம்- ஆளுநருக்கு புகார் மனு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பிச்சாவரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் அலுவலகத்தில் ஆக. 15 சுதந்திரதினத்தன்று தேசிய கொடி ஏற்றாமல் இருந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதியை சார்ந்த விவசாயி கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் இது குறித்து சம்பந்தபட்ட ஊராட்சியின் செயலாளர் பரமேஸ்வரியிடம் கேட்டபோது, பொதுமக்களையும்,தேசியகொடியையும் அவமதிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இதுகுறித்து பேசியுள்ளனர். கிராம சபைகூட்டத்தில் கலந்து கொள்ளவந்த வட்டார வள அதிகாரியும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால் கிராம சபை கூட்டத்தை பாதிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புறக்கணித்துள்ளனர்.
சுதந்திரதினத்தில் ஊராட்சி அலுவலகத்தில் தேசியகொடியை ஏற்ற மறுத்தவர் மீதும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் அந்த பகுதியை சார்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதனிடையே பொதுமக்களின் எதிர்ப்பு அதிமாக இருப்பதை அறிந்த ஊராட்சியின் செயலாளர் மதியம் 1 மணிக்கு மேல் அலுவலகத்திற்கு ஓரமாக மரத்தை நட்டு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். சுதந்திரதினத்தில் தேசிய கொடியை ஏற்றாதது அந்த பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
- காளிதாஸ்