Skip to main content

பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓபிஎஸ்,இபிஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மீசையை எடுக்கிறேன்-பழனிமாணிக்கம் பேச்சு

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

புதுக்கோட்டை திமுக தெற்கு மாசெ தங்கவேல் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் மாஜி மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்.

      

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வமும் அவர்களின் கட்சிக்காரர்களின் விருப்பமில்லாமல் பதவியில் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் இருவரும் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்டால் அவர்களின் கட்சிக்காரர்களே தோற்கடிப்பார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் என் மீசையை எடுத்துக் கொள்கிறேன்.

   

dmk

 

ராமதாஸ் கூட்டணி வைக்க 10 கட்டளை வச்சாராம் நிறைவேற்றுவார்கள் என்று கூட்டணி வச்சாராம்.. இப்ப மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பது யார்? இப்போது நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை பிறகு எப்படி ஏற்பார்கள். உடனே மதுவிலக்கை அமல்படுத்தச் சொல்ல முடியாதா?  நீட்டை ரத்து செய்ய முடியாதா? சீட்டுக்காக மக்களை ஏமாற்ற 200% என்றெல்லாம் பேசிவிட்டு இப்ப கூட்டணி. மக்கள் சிரிக்கிறார்கள். 

 

அதுக்கு விஜயகாந்த் பரவாயில்ல அவர்களுக்கு கொடுத்ததைவிட ஒரு சீட் மேல கொடுன்னு 3 நாளா இழுத்தடிக்கிறார்.

 

 

இப்ப ரூ 2 ஆயிரம் திட்டம் ஒன்று ரூ 6 ஆயிரம் திட்டம் ஒன்றும் அறிவிச்சிருக்காங்க. கடந்த 5 வருசமா இந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை கண்ணுக்கு தெரியல இனிதான் தெரியுமா? ரூ 2 ஆயிரத்துக்கு வறுமை கோடு போடனுமாம். அந்த கோட்டுக்காக விவசாயிகள் தாலுகா ஆபிஸ்ல குவியுறாங்க அதிகாரிகள் திணறுறாங்க.

    

4 ஊருக்கு வந்த மோடி எடப்பாடி மாதிரி விமானத்துலயாவது வந்து புயல் பாதிப்பை பார்த்தாரா? விவசாயிகள் மீது அவ்வளவு தான் அக்கரை.  வாசன் பாவம் 2 கேட்கிறார் போல ஒன்னு தான்னு சொல்றாங்க மூப்பனார் பிள்ளைக்கு ஏற்பட்ட நிலைமையை பார்த்தீங்களா?

   

திமுக கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாகும் கூட்டணி அல்ல பல வருடங்களாக மத்திய மாநில அரசுகளின் அநீதிகளுக்கு எதிராக சேர்ந்த மக்களுக்காண கூட்டணி.

  

14 பேரை தூத்துக்குடியில் சுட்டுக் கொன்ற நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுத்த அரசாங்கம் தான் விவசாயிகளுக்கு நல்லது செய்யப் போகிறதா?  ஸ்டெர்லைட் ஆலைக்கான தீர்ப்பு என்பது தேர்தலுக்கான தீர்ப்பாக உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தீர்ப்புகள் மாறலாம்.

   

ராணுவ வீரர்கள் 44 பேர் இறப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது. எல்லாம் முடிஞ்ச பிறகு ஒத்திகை பார்ப்பது வேதனையானது. ராணுவத்தை எப்பவும் தயார் நிலையில் வைத்திருக்க முடியாத ஒரு அரசாங்கமாக உள்ளது மோடி அரசாங்கம். அதனால தான் ஒத்திகை என்ற பெயரில் நம்இளைஞர்களையே பலி கொடுக்கிறார்கள். நாம் ஒத்திகை பார்க்கும் போது எதிரி சுதாரித்துக்கொள்ளமாட்டானா? தேர்தலுக்காக ராணுவ வீரர்களின் உயிர்களை அடமானம் வைக்காதீர்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்