திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சியில் திமுக 90 சதவீதம் வெற்றி பெற்றதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி மகிழ்ச்சியில் இருக்கிறார். 40 ஆண்டு காலமாக தனது சொந்த ஊரான வத்தலகுண்டில் அதிமுகவின் கோட்டையாக இருந்த ஜி.தும்மலப்பட்டி, கோம்பைப்பட்டி, விராலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுக சார்பில் போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டையை சுக்குநூறாக நொறுக்கி இருப்பது ஐ .பெரியசாமியை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
வத்தலக்குண்டு திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் மனைவி பரமேஸ்வரி முருகன் பெரும்பான்மை பலத்துடன் ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதனிடையே நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 10, திமுக 7, பாமக 1, சுயேச்சை 2 என்ற நிலையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக ஆதரவு தேடும் நிலையில் உள்ளது.
தற்போது ஐ.பி கொடுத்த திடீர் அசைன்மென்டால் திமுக மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் பம்பரமாக துவங்கியுள்ளனர். 4 கவுன்சிலர்களை திமுகவுக்கு கொண்டு வருவதற்கு தீவிரமாக அவர்கள் களத்தில் இறங்கிய உடன், அதிமுக தரப்பு ஆடிப்போனது. அதிமுக ஆக்டிங் யூனியன் சேர்மன் ஆக வலம் வர நினைத்த அதிமுக ஒன்றியச் செயலாளர் யாகப்பன் நேற்று அதிமுக மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் பதவியேற்ற கையோடு பாமக கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேரையும் 3 கார்களில் கடத்தி ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றார்.
ஆனால் முயற்சியை கைவிடாத திமுக தரப்பு கவுன்சிலர்களின் உறவுகள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.பி யின் அதிரடி அசைன்மென்டால் என்ன ஆகுமோ என்ற தவிப்பில் இருக்கிறனர் நிலகோட்டையை சேர்ந்த ஆளும் கட்சியினர்.