Skip to main content

திமுக ஆட்சியில் காவேரி நீரை பாலாற்றுக்கு கொண்டு வந்து விவசாயம் செய்ய திட்டம் தீட்டப்படும்- திமுக பொதுச்செயலாளர் பேட்டி

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
DMK DURAIMURUGAN INTERVIEW


திமுக பொது செயலாளராக பொறுப்பேற்று முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த துரைமுருகனுக்கு வேலூர் மேற்கு மாவட்ட (திருப்பத்தூர் மாவட்டம்) மாவட்ட செயலாளர் (பொறுப்பு) க.தேவராஜி தலைமையில் திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்ளை சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுமாலை அணிவித்தும், ஷால்வை வழங்கி சிறப்பான வரவேற்பளித்தனர்.

கழக நிர்வாகிகள், தொண்டர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, திமுக ஆட்சியின் போது காவேரியில் நாயினூர் என்ற இடத்தில் 5 அடி உயரத்தில் ரூபாய் 189 கோடி செலவில் ஒரு தடுப்பணை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஆட்சி முடிந்தது. 10 ஆண்டுகள் முடிந்தும் தடுப்பணையில் தண்ணீரை தேக்க ஆட்சி செய்யும் அதிமுகவினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தாமிரபரணியில் மழைக்காலத்தில் அதிகமாக வரும் தண்ணீரை கருமேரி ஆற்றுடன் இணைத்து அங்குள்ள குளங்களில் தண்ணீரை நிறுத்த சுமார் ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டத்தை நிறைவேற்ற பாதி அளவுக்கு வேலையும் முடித்து விட்டோம். ஆட்சி மாற்றத்தால் கடந்த பத்தாண்டுகளாக அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து வெளியாகும் தண்ணீரை செய்யாற்றில் கலக்க திட்டம் போடப்பட்டது அதுவும் கிடப்பில் உள்ளது. இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதல் திட்டமாக காவேரியில் வரும் தண்ணீரை கொண்டு வந்து பாலாற்றில் விட்டு விவசாயம் பெருக தடுப்பணைகள் கட்டி நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்