Published on 05/07/2021 | Edited on 05/07/2021

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுதல் மற்றும் கரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடையை மூடக்கோரி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக சார்பில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.