Skip to main content

திருநாவலூர் காவல் நிலைய சம்பவம் - உயர் அதிகாரிகளை விளாசிய வடக்கு மண்டல ஐஜி நாகராஜ்

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
dewali

 

 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் திடீர் ஆய்வின்போது ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் 100 இலவச பட்டாசு பாக்ஸ், பேண்ட் சர்ட் 50 செட் என காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்ததில் இதுவரை கிடைத்துள்ளது.  
 

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ்சிடம் சுமார் 7 மணி நேரமாக விசாரணை செய்தனர். தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுப்பட்டதால் திருநாவலூர் காவல் நிலையம் ஆய்வாளர் ஆதிலிங்க போஸ் ஆயுத படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவிட்டார். 
 


 திருநாவலூர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்கள் குற்றச்சாட்டுகள் இன்ஸ்பெக்டர் மீது எழுந்தன. இதனிடையே லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய இன்ஸ்பெக்டர் மீது இத்தனை மாதங்களாக புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளை கண்டித்துள்ளார். 
 

குறிப்பாக உளுந்தூர்பேட்டை சப்டிவிஷன் டிஎஸ்பி ராஜேந்திரன், மற்றும் உளுந்தூர்பேட்டை தனிப்பிரிவு உட்கோட்ட எஸ்ஐ, திருநாவலூர் காவல்நிலைய போலீஸ் ஆகியோர் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து தகவல் தெரிவிக்கவில்லை, என்ன செய்து கொண்டிருந்தார்கள் எனவும் கேட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த ஐஜி நாகராஜ் உயர் அதிகாரிகளை மைக் மூலம் கண்டித்ததாக கூறப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்