சிதம்பரம் அருகே நரபலி சாமியார் ஒருவர் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற வழக்கை நீர்த்துபோக செய்யும் அளவுக்கு காவல்துறையினர் செயல்படுவது வருவாய் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாதோப்பு குறுக்கு சாலையில் ஆறுமுகசாமி என்ற நரபலி சாமியார் கருப்புசாமி என்ற கோயிலை கட்டிகொண்டு மதுபான போதையில் சுருட்டை புகைத்தாவாறு குறிசொல்வது வழக்கம். இவர் மீது நரபலி கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் இவர் கோயிலுக்கு பின்புறம் பிரதான நீர்வழி வாய்காலை ஆக்கிரமித்து மூன்று மாடி கட்டிடம் மற்றும் நீளமான கட்டிடம் ரூ 1 கோடி செலவில் கட்டி ஆக்கிரமித்துள்ளார். இதனை அப்புறபடுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்திவிட்டும் அப்புறபடுத்தாமல் சாமியார் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை சரிசெய்து கொண்டு காலம் கடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார் உள்ளிட்ட வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை, காவல் துறையினர் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடத்தை இடிக்க சென்றனர். அப்போது ஆக்கிறமிப்பை அகற்றகூடாது என்று ஆறுமுகசாமி அவரது ஆதரவாளர்கள் மண்ணெண்னையை உடலில் ஊற்றிகொண்டு கோட்டாட்சியர் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கோட்டாட்சியர் ராஜேந்திரன் ஆறுமுகசாமி மற்றும் ஆதரவாளர்கள் என்மீது மண்ணெண்னை ஊற்றி கொலை செய்ய முயன்றார்கள் என்று சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து சாமியார் மீது கடுமையான பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்திரவிட்டார். மேலும் இதுபோன்ற சம்பவத்திற்கு போதுமான எண்ணிக்கையில் காவலர்களை நியமிக்காதது குறித்து காவல்துறையினரிடம் கோபம் அடைந்துள்ளார்.
ஆனால் சேத்தியாதோப்பு காவல்துறையினரோ கோட்டாட்சியர் கொடுத்த புகாருக்கு சரியான பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல் வழக்கில் இருந்து விரைவில் வழக்கில் இருந்து வெளிவரும் வகையில் சாமியாருக்கு சாதகமான முறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாமியார் சம்பவ இடத்திலே காவல்துறையினரிடம் சிரித்து பேசி குளாவி வருகிறார். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சாமியாரை கைது செய்ய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை அறிந்த வருவாய்துறையினர் கோட்டாட்சியருக்கே இந்த நிலமை என்றால் சாதரன ஊழியர்களை காவல்துறையினர் எப்படி நடத்துவார்கள் என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சேத்தியாதோப்பு காவல்ஆய்வாளர் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த வழக்கு விசாரணையில் ரெபர் செய்யப்படும். நாங்க தான் திங்களன்று இடிக்கவேண்டாம் என்று கூறினோமே இவர் ஏன் வந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆறுமுகசாமி என்ற போலிசாமியார் மக்களை தவறான முறையில் வழிநடத்துகிறார். இவரால் பலர் பாதிக்கப்பட்டு வழக்குதொடுத்துள்ளார். நரபலி உள்ளிட்ட வழக்குகள் இவர்மீது உள்ளது. இதனை கண்டித்து புவனகிரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த சம்பவத்தில் காவல்துறையினர் சாமியாரிடம் கைகோர்த்துகொண்டு கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற வழக்கை நீர்த்து போக செய்யும் அளவுக்கு செயல்படுவது கண்டிக்கதக்கது. கோட்டாட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்து தக்க தண்டனை அளிக்கவேண்டும் என்று புவனகிரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் சதானந்தம் கூறியுள்ளார்.