அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: ஆர்.டி.ராமசந்திரன் எம்.எல்.ஏ., பேட்டி
தமிழக முதல்வர் யாரிடமும் கெஞ்சாமல், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தைரியமாக ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என குன்னம் அதிமுக எம்.எல்.ஏவும் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமசந்திரன் தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் அரியலூர் மாவட்டம், செந்துறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அதிமுக ஆட்சி நடக்கும் போதே அதிமுகவின் இரு அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஊழல் ஆட்சி என்று கூறிவருகின்றனர். இது வெட்க கேடான செயல் ஆகும். சிலர் தங்களது சுயலாபத்திற்காகவே அம்மா ஆட்சியை மிரட்டி வருகிறார்கள். எனவே தமிழக முதல்வர் யாரிடமும் கெஞ்சாமல், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தைரியமாக ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.
ஜெயலிலதா ஆட்சி வரவேண்டும் என என்னுபவர்கள் ஜெயலலிதா பெயரை சொல்லியும், சசிகலாவை பொதுச்செயலாளராக வேண்டும் என்பவர்கள் சசிகலா பெயரையும், படத்தையும் வைத்து கொண்டு தேர்தலை சந்திக்கட்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என கூறினார். இவர் ஆரம்பம் முதலே எடப்பாடி ஆதரவு எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
- எஸ்.பி.சேகர்