Skip to main content

ரயில் முன் பாய்ந்து குடும்பத்துடன் தற்கொலை... காவல்துறை தீவிர விசாரணை!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு ரயில் நிலையம் அருகே ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

dindigul district train incident police investigation


இந்த விஷயம் ரயில்வே போலீஸுக்கு தெரியவே சம்பவ இடத்திற்கு வந்த கொடைரோடு ரயில்வே போலீசார் ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஆதார் மற்றும் டைரி உள்ள குறிப்பில் திருச்சி மாவட்டம் உறையூர் காவேரி நகர் நான்காவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த  உத்தரபாரதி, அவரது மனைவி சங்கீதா அவரது மகள் அபினயஸீ  (14 வயது) மற்றும் ஆகாஸ் (12 வயது) என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் என தெரியவந்துள்ளது. 
 


எனினும் அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தால் உடல்கள் சிதறி முகம் சிதைந்துள்ளதால், ஆதார் கார்டில் உள்ளவர்கள் இவர்கள் தானா? என்பதை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக 
அனுப்பி வைத்தனர்.


மேலும் அவர்களில் ஒருவர் பாக்கெட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கொடைரோடு ரயில் நிலையத்திற்கு எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் மற்றும் கொடைரோடு இருந்து கொடைக்கானலுக்கு சென்ற பஸ் டிக்கெட்டுகள இருந்துள்ளது. இதனை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட உத்திர பாரதி மூன்று பேருடன் சேர்ந்து மருந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடன் பிரச்சனை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகத் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

சார்ந்த செய்திகள்