Skip to main content

திண்டுக்கல் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Published on 01/01/2018 | Edited on 01/01/2018
திண்டுக்கல் பேருந்து விபத்து: 
பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு



திண்டுக்கல்  அருகே உள்ள மூலசத்திரத்தில்  இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில்  இது வரை  எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூலசத்திரம் அருகே திண்டுக்கல்லில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்தும், பழனியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் நிகழ்விடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

          இறந்தவர்கள்  உடல்கள்  திண்டுக்கல் மற்றும்  ஒட்டன்சத்திரம்  அரசு மருத்துவமனையில்  வைக்கப்பட்டுள்ளது.  இதில் ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் நத்தத்தை  சேர்ந்த  போதுமனி, திண்டுக்கல்லை சேர்ந்த டேனியல், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வசீகரன்  ஆகியோர்  உடல்கள் உள்ளது. அது போல் திண்டுக்கல்  அரசு தலைமை மருத்துவமனையில் ஈரோடு சத்தியமூர்த்தி,  மணப்பாறை  விஸ்வநாதன்,  நத்தம் சபரி, கோவை புவனேஸ்வரி,  அய்யலூர் முருகேஸ்வரி   ஆகிய  ஐந்து  உடல்கள்.  உள்ளது.இ ந்த  பஸ்கள்   கோர விபத்து மூலம்  இதுவரை  எட்டு  பேர்  பலியாகி இருப்பது மாவட்டத்தில்  பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  
-  சக்தி 

சார்ந்த செய்திகள்