Published on 11/11/2021 | Edited on 11/11/2021
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தபோது 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. கரையை கடந்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நாளை (12/11/2021) வழுவிழக்கும்.
ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.