Skip to main content

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
 டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை 
எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கீரமங்கலம் மற்றும் சுற்றவட்டாரக் கிராமங்களில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், குளமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, நகரம், மாங்காடு மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் கடந்த ஒரு மாதமாக காய்ச்சலாம் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த புதன் கிழமை பனங்குளம் கிழக்கு தமிழ்மாறன் மகள் காயத்திரி (4) என்ற சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களை சுகாதாரத்துறை கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுமி வீட்டிற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் சிறப்பு மருத்துவமுகாம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கீரமங்கலத்தில் ஒன்றிய பொருளாளர் வேலரசன் தலைமையில், ஒன்றியச் செயலாளர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் தமிழரசன், மாவட்டக்குழு கருணா ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் நாராயணன் கலந்து கொண்டு பேசினார். மேலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- பகத்சிங்

சார்ந்த செய்திகள்