கிரண்பேடி தலைமையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி முழுவதும் டெங்கு அதிக அளவில் பரவி வருகிறது என்றும், இதனை அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். மேலும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை பள்ளி மாணவ மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், அதிகாரிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் ராஜ் நிவாஸில் இருந்து டெங்கு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இவர்கள் டெங்கு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு குருசுகுப்பம் , சோலை நகர், முத்தியால்பேட்டை, பெருமாள் கோவில் வீதிகளில் பேரணியாக சென்றனர். மேலும் வீடுகள் தோறும் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புர்ணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் சுத்தப்படுத்தப்படாத கழிவு நீர் கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுனர் கிரண் பெடி உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் கிரண்பேடி கூறும்போது, டெங்கு காய்ச்சல் மிக கொடூரமானது. அதனை தடுக்க அதிகாரிகள் , துப்புரவு பணியாளர்கள் மட்டும் வேலை செய்தால் போதாது. பொதுமக்களும் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள தேங்கிய நீரை வெளியேற்றி கொசுக்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.
- சுந்தரபாண்டியன்