கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, ஏர்கலப்பை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன், சத்தியமூர்த்தி, வெங்கடேசன், ஜெயச்சந்திரன், புவனகிரி வட்டாரத் தலைவர் சேரன், திட்டக்குடி அன்பரசு, இளங்கீரன், கொள்ளிடம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பானுசேகர், மாவட்டத் துணைத் தலைவர் குமார், லட்சுமணன், சிதம்பரம் நகர வர்த்தக காங்கிரஸ் தலைவர், சுந்தர்ராஜன், சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவர் பாலதண்டாயுதம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக, கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் பெரியசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் இராதாகிருஷ்ணன், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஏர்கலப்பையைக் கையில் வைத்துக்கொண்டு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்துக் கோசங்களை எழுப்பினர். மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோசங்களை முன்மொழிந்தனர்.