Skip to main content

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

2015ஆம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக பணியாற்றிவரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தல் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை அவர்கள் மேற்கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டவிரோத கருக்கலைப்பு; ஓய்வு பெற்ற பெண் செவிலியர் கைது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
illegal abortion; Retired female nurse arrested

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஆவார். கடத்த ஐந்து ஆண்டுகளாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் பலருக்கு தெரிவித்து வந்த காந்திமதி, இதற்காக 20,000 பெற்றுக் கொண்டு கடந்த 5 வருடங்களாக கருக்கலைப்பிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மருத்துவத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அங்கு சென்ற நிலையில், நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக ஓய்வுபெற்ற செவிலியர் காந்திமதியை போலீசார் கைது செய்தனர்.

Next Story

பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்? - செவிலியர் பணியிடை நீக்கம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனையில், அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் தனது மனைவி சிந்துவுக்கு பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில், பிரசவம் பார்க்க செவிலியர் அமுதா ரூ.5 ஆயிரம் கேட்டு சிந்துவின் உறவினர்களுடன் தகராறு செய்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவியது. 

 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்நிலையில், இன்று திங்கள் கிழமை பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து செவிலியர் அமுதாவை பணியிடை நீக்கம் செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.