டெல்லியில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
தேசிய தென்னி்ந்திய நதிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பயிர்கடன் ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக முதல்வரை சந்திப்பதற்காக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.